\
லக்கிம்பூர் விவகாரம்: யாரெல்லாம் குற்றவாளிகள்? - உ.பி அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

லக்கிம்பூர் விவகாரம்: யாரெல்லாம் குற்றவாளிகள்? - உ.பி அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

லக்கிம்பூர் விவகாரம்: யாரெல்லாம் குற்றவாளிகள்? - உ.பி அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
Published on: 

லக்கிம்பூர் விவசாயிகள் உயிரிழந்த விவகாரத்தில் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து அறிக்கை தர உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் யார் யாரெல்லாம் குற்றவாளிகள், யார் மீதெல்லாம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், தாக்குதலில் காயம் அடைந்தவர்களுக்கு உடனே மருத்துவ உதவிகளை வழங்கவேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உத்தரப்பிரதேச அரசு விரிவான அறிக்கை தர உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

நடந்த விஷயம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது, எப்.ஐ.ஆர் பதியப்பட்டு நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என நீதிமன்றத்தில் உத்தரப்பிரதேச அரசு தெரிவித்திருக்கிறது.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com