இந்தியா
வேளாண் சட்டங்கள் : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
வேளாண் சட்டங்கள் : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
3 வேளாண் சட்டங்களும் செல்லாது என அறிவிக்கக்கோரி திமுக எம்.பி திருச்சி சிவா, ராஷ்டீரிய ஜனதா தள கட்சி எம்.பி மனோஜ்குமார் ஜா உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இதுகுறித்து 4 வாரத்திற்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட்டுள்ளனர். முன்னதாக நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.