கோவை குண்டு வெடிப்பு; 16 சிறைவாசிகள் வழக்கில் உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு

கோவை குண்டு வெடிப்பு விவகாரத்தில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் 16 பேர் தாக்கல் செய்த பிணை மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்pt web

1998-ம் ஆண்டு கோவையில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் மூஸா மொய்தீன் உட்பட 16 பேர் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ளனர். 24 ஆண்டுகளாக சிறையில் உள்ளதால் கருணை அடிப்படையில் சில நிவாரணங்களை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் குற்றவாளிகள் 16 பேரும் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது.

இந்த மனு நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டி தங்களுக்கு பிணை வழங்க வேண்டும் எனக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் கிஷன் தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிறையில் உள்ள 16 பேருக்கும் பிணை வழங்கினால், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என தமிழ்நாடு அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், கோவை குண்டு வெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகள் 16 பேரின் பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், முதன்மை வழக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனக் கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com