உச்சநீதிமன்ற நீதிபதி மோகன் எம் சந்தானகவுடர் காலமானார்

உச்சநீதிமன்ற நீதிபதி மோகன் எம் சந்தானகவுடர் காலமானார்
உச்சநீதிமன்ற நீதிபதி மோகன் எம் சந்தானகவுடர் காலமானார்

உச்சநீதிமன்ற நீதிபதி மோகன் எம் சந்தானகவுர் நுரையீரல் தொற்றுகாரணமாக, குர்கானில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார்.

உச்சநீதிமன்ற நீதிபதி மோகன் எம்.சந்தானகவுர் (வயது 62) நுரையீரல் தொற்று காரணமாக, குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஐ.சி.யுவில் இருந்தார். சனிக்கிழமை இரவு வரை அவரது உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் அதிகாலை 12.30 மணியளவில் அவர் காலமானார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

மோகன் எம்.சந்தானகவுர் மே 5, 1958 அன்று கர்நாடகாவில் பிறந்தார். செப்டம்பர் 5, 1980 இல் ஒரு வழக்கறிஞராக சேர்ந்த அவர், மே 12, 2003 அன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, செப்டம்பர் 2004 இல் கர்நாடக நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக ஆனார். பின்னர் செப்டம்பர் 22, 2016 அன்று கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆன சந்தான கவுடர், பிப்ரவரி 17, 2017 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com