லக்கிம்பூர் விவகாரம் - உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை

லக்கிம்பூர் விவகாரம் - உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை

லக்கிம்பூர் விவகாரம் - உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை
Published on

நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய லக்கிம்பூர் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை நடத்த உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த 3ஆம் தேதி விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது நடந்த வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கார் மோதி விவசாயிகள் இறந்ததாகவும் இதுவே பின்னர் வன்முறையாக மாறியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

இவ்விவகாரத்தில் குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி 2 வழக்கறிஞர்கள் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரிக்க உள்ளது. முன்னதாக இவ்விவகாரத்தில் குற்றச்சாட்டுக்குள்ளான அமைச்சரின் மகனை கைது செய்யாத உத்தரப்பிரதேச அரசின் செயல் குறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தி வெளியிட்டிருந்தது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com