பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா உள்ளார்.
இந்திய வரலாற்றில் முதன்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் ஆகியோர் இன்று டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சரமாரியாக புகார்கள் கூறினர். வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் செய்வதாகவும், மூத்த வழக்கறிஞர்களுக்கு ஒதுக்கீடு செய்வதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினர்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ரா மீது இப்படி வெளிப்படையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதனால், தீபக் மிஸ்ரா வழங்கிய தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.
தீபக் மிஸ்ராவின் முக்கிய தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகள்
- டெல்லி நிர்பயா கூட்டு பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கியது
- சிறுவர்களின் ஆபாச இணையதளங்களை தடை செய்தது
- சபரிமலை ஆலயத்தை பெண்களுக்கும் திறந்துவிடவேண்டும்
- திரையரங்குகளில் தேசிய கீதம் பாடவேண்டும் என்பதை கட்டாயமாக்கியது
- 24 மணி நேரத்தில் இணையத்தில் எஃப்.ஐ.ஆர் நகல் பதிவு செய்ய வேண்டும்
- யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது
- பதவி உயர்வில் இட ஒதுக்கீடுக்கு தடை விதித்தது
- 1984-ம் ஆண்டு சிக்கிம் கலவர வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார்
- ராம் ஜென்பூமி வழக்கை விசாரித்து வருகிறார்
தீபக் மிஸ்ராவின் வாழ்க்கை விவரம்:-
- 1953 - அக்டோபர் 3–ந் தேதி ஒடிசா மாநிலத்தில் பிறந்தார்
- 1977 - பிப்ரவரி 14–ந் தேதி, வக்கீலாக பதிவு
- 1996 - ஜனவரி 17–ந் தேதி ஒடிசா உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமனம்
- 1997 - டிசம்பர் 19–ந் தேதி நிரந்தர நீதிபதியாக நியமனம்
- 2009 - டிசம்பர் மாதம் 23–ந் தேதி பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆனார்
- 2010 - மே மாதம் 24–ந் தேதி டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார்
- 2011 - அக்டோபர் மாதம் 10–ந் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு
- 2017 - ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியானர்
- 2018 - அக்டோபர் 2-ஆம் தேதி அவர் ஓய்வு பெறுகிறார்(13 மாதங்கள் பதவிகாலம்)