சீமான் வழக்கு... உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
நடிகை ஒருவரின் புகாரின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான வழக்கில் 12 வார காலத்துக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த 27-ம் தேதி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டிய சீமான் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக அவரின் வழக்கறிஞர்கள் காவல்நிலையத்தில் ஆஜராகி விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனக் கடிதம் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து, காவல்துறை, சீமான் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது காவல்துறை. அதை அகற்றிய சீமானின் வீட்டு உதவியாளருக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட விவகாரமும், அதைத் தொடர்ந்த சீமானின் பேச்சுகள் அரசியல் அரங்கில் விவாதமானது.
இந்த நிலையில், உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து சீமான் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ``எதிர்மனுதாரர் தங்களின் தரப்பு விளக்கம் என்ன என்பதற்கு பதிலளிகக் நோட்டீஸ் வழங்கப்படும். இரு தரப்புக்கு இடையே நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.
எனவே, எதிர்மனுதாரர் பதிலளித்தப் பிறகு இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரித்தப் பிறகே காவல்துறை சீமானை விசாரிக்க வேண்டும். அதுவரை இந்த விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது" என உத்தரவிட்டிருக்கிறார்.