“வெறும் பிறப்புறுப்பின் மூலம் ஆண்-பெண் என முடிவுசெய்ய முடியாது” - உச்சநீதிமன்றத்தில் காரசார விவாதம்!

“தன் பாலின திருமணங்களை அங்கீகரிக்க கூடிய அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு தான் உள்ளது, எனவே நீதிமன்றம் இந்த விவகாரத்தை விசாரிக்க கூடாது” என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு காரசார வாதங்களை முன் வைத்தது.
தன் பாலின திருமணம்
தன் பாலின திருமணம்PT

தன் பாலின திருமணங்களை அங்கீகரிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கொண்ட ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசனம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

தன் பாலின ஈர்ப்பாளர்கள்
தன் பாலின ஈர்ப்பாளர்கள்டிவிட்டர்

இவ்விவகாரத்தில் ஏற்கெனவே ‘தன் பாலின திருமணங்களை அங்கீகரிக்க கூடாது, இத்தகைய ஜோடிகள் குழந்தைகளை தத்தெடுப்பதையும் அனுமதிக்க கூடாது. ஏனென்றால் இவர்கள் வளர்க்கக்கூடிய குழந்தைகளுக்கு பாலினம் குறித்த புரிதல் இல்லாமல் போகும்’ என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த மனுக்களின் பேரில் உச்சநீதிமன்றத்திற்கும், மத்திய அரசுக்கும் இடையே காரசார விவாதங்கள் வைக்கப்பட்டது.

'இது சமூகம் சார்ந்த விஷயம், இதற்கு முடிவெடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு தான் உண்டு!'

இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “தன் பாலின திருமணங்களை அங்கீகரிக்க கூடிய விவகாரத்தை நீதிமன்றங்கள் விசாரிக்க கூடாது. இது ஒரு சமூகம் சார்ந்த விஷயம் என்பதால், இது குறித்து முடிவெடுக்க வேண்டியது நாடாளுமன்றம் தான். எனவே முதலில் இந்த விஷயத்தை நீதிமன்றம் விசாரிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும்” என்ற வாதத்தை முன் வைத்தார்.

 உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்PT

இதற்கு நீதிபதிகள், “நிச்சயமாக மத்திய அரசின் இந்த வாதத்தை நாங்கள் பரிசீலிக்கிறோம். ஆனால் அதற்கு முன்பாக இந்த வழக்கின் மெரிட்டுகள் குறித்து அடிப்படையான விஷயங்களை பார்க்க வேண்டும். அப்போதுதான் விசாரணையை எந்த கோணத்தில் எடுத்து செல்லலாம் என்பதை முடிவு செய்ய முடியும்” என தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட துஷார் மேத்தா, “அப்படி எனில் ஆரம்ப கட்ட விசாரணையில் நாங்கள் பங்கேற்க போவதில்லை” என கறாராக கூறினார்.

'முக்கியமான விவகாரம் குறித்து சுட்டிக்காட்டும் உரிமை நீதிமன்றத்திற்கு உண்டு!'

அப்போது பேசிய நீதிபதிகள், “மத்திய அரசு இப்படி சொல்லக்கூடாது. இது ஒரு மிக முக்கியமான விவகாரம் என்பதால், இதன் தன்மையை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்” என அறிவுரை வழங்கினர். மேலும் , “இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்திற்கு இருக்கக்கூடிய அதிகாரத்தை நாங்கள் மறுக்கவில்லை. அதே நேரத்தில் நாடாளுமன்றம் ஒரு விவகாரத்தில் தலையிடாமல் போகும் போது, அதனை சுட்டிக்காட்டும் வேலைகளை நீதிமன்றங்கள் செய்ய இயலும்.

தன் பாலின ஈர்ப்பாளர்கள்
தன் பாலின ஈர்ப்பாளர்கள்PT

சமுதாயம் என்பது பரிணாம வளர்ச்சி அடையக்கூடியது. தன் பாலின உறவை குற்றமற்றது என பிரிவு 377ன் உச்சநீதிமன்றம் அறிவித்தது என்பது அதி முக்கியமான ஒன்று. அதன் பிறகு தன்பாலின சேர்க்கையாளர்கள் குறித்த சமுதாயத்தின் பார்வை மாறி இருப்பது என்பது மிக முக்கியமான சாதனை” என்று தொடர்ந்து கருத்து தெரிவித்தனர்.

'தன்பாலின திருமணங்கள், தனிச்சட்டத்தின் கீழ் குழப்பத்தை ஏற்படுத்தும்!'

ஆனால் அதற்கு எதிர்ப்பை பதிவு செய்த மத்திய அரசு, “தன்பாலின திருமணங்களை அங்கீகரிப்பது என்பது தனிச் சட்டத்தின் கீழ் குழப்பங்களை ஏற்படுத்தும். மேலும் திருமண சட்டங்கள் என்பது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடக் கூடியதாக இருக்கிறது.

தன் பாலின திருமணம்
தன் பாலின திருமணம்PT

எனவே இந்த விவகாரத்தில் மாநில அரசுகளின் கருத்துக்களை நிச்சயமாக கேட்க வேண்டும். ஒரு ஆண் மற்றும் பெண் இடையிலான திருமணங்களை மட்டுமே அங்கீகரிக்க முடியும்” என மத்திய அரசு மீண்டும் கூறியது.

'ஆண், பெண் என்பதை வெறும் பிறப்புறுப்பின் மூலம் முடிவு செய்ய முடியாது!'

இதற்கு உச்ச நீதிமன்றம், “ஆண் மற்றும் பெண் என்பதை வெறும் பிறப்புறுப்பின் மூலமாக மட்டும் முடிவு செய்ய முடியாது. அது அதிக சிக்கல்கள் நிறைந்தது” என திட்டவட்டமான பதில் அளித்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, தன்பாலின ஈர்ப்பாளர்கள் தொடர்புடைய விவரங்களை எடுத்துரைத்தார்.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்PT

முடிவாக இன்றைய முதல் நாள் வழக்கு விசாரணை முடிவடைந்தது. மீண்டும் நாளைக்குக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com