மணிப்பூர் வன்கொடுமை விவகாரம்: பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு!

மணிப்பூர் வன்முறையில் ஆடைகள் இன்றி இழுத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட இரண்டு பெண்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
supreme court
supreme courtpt desk

இரண்டு இன குழுக்கள் இடையே பெரும் வன்முறை ஏற்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே மாதம் 3-ம் தேதி இரண்டு பழங்குடியின பெண்கள் ஆடைகள் இன்றி இழுத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இதுதொடர்பான வீடியோ சில வாரங்களுக்கு முன் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

manipur
manipur pt web

இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து பல்வேறு கருத்துகளை தெரிவித்ததோடு மணிப்பூர் அரசு மற்றும் மத்திய அரசு இந்த விவகாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்தது. இவ்விவகாரம் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுவதாகவும் வழக்கின் விசாரணையை மணிப்பூர் மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரியும் மத்திய அரசு கோரியிருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உடல் நலம் சரியில்லாத காரணமாக அன்றைய தினம் விசாரணை நடைபெறவில்லை.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரிக்கப்பட உள்ளது. இதற்கிடையில் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் “இந்த விவகாரம் தொடர்பாக தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து வெளிப்படையான விரிவான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல தங்களது அடையாளங்களை வெளியிடாமல் பாதுகாக்க உத்தரவிட கோரியும் அப்பெண்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com