\
உயர் நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்ட தன்பாலின ஈர்ப்பாளர்

உயர் நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்ட தன்பாலின ஈர்ப்பாளர்

உயர் நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்ட தன்பாலின ஈர்ப்பாளர்
Published on
தன்பாலின ஈர்ப்பாளரான மூத்த வழக்கறிஞர் சவுரப் கிர்பாலை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால் இந்தியாவில் நீதிபதியாக பதவியேற்கும் முதல் தன்பாலின ஈர்ப்பாளர் சவுரப் கிர்பால் இருப்பார்.
தான் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என கிர்பால் வெளிப்படையாகவே கூறிவரும் நிலையில் ஏற்கனவே இவரது பெயர் மூன்று முறை உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. எனினும் பல காரணங்களால் அவர் நியமிக்கப்படவில்லை. தற்போது சவுரப் கிர்பாலை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. ஆக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களில் சட்டப் படிப்பை முடித்துள்ள இவர் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான பி என் கிர்பாலின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com