மேற்கு வங்கத்தில் பட்டாசு வெடிப்பதற்கு விதித்த தடை உத்தரவு ரத்து

மேற்கு வங்கத்தில் பட்டாசு வெடிப்பதற்கு விதித்த தடை உத்தரவு ரத்து
மேற்கு வங்கத்தில் பட்டாசு வெடிப்பதற்கு விதித்த தடை உத்தரவு ரத்து
மேற்கு வங்க மாநிலத்தில் பட்டாசு விற்கவும் வெடிக்கவும் தடை விதித்த கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.
மேற்கு வங்க மாநிலத்தில் காளி பூஜை, தீபாவளி, குருநானக் ஜெயந்தி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு அனைத்து பண்டிகைகளின் போது பட்டாசுகள் விற்பதையும் வெடிப்பதையும் தடுக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக கௌதம் ராய் என்பவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வில் விசாரணை நடைபெற்றது.
அப்போது பட்டாசுக்கு தடை கோரிய உச்சநீதிமன்றத்தின் மனுதாரரான அர்ஜுன் கோபால் தரப்பு, பட்டாசால் கடும் மாசு ஏற்படுவதோடு, தற்போது பசுமைப் பட்டாசு என்ற போர்வையில் தடை செயப்பட்ட பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் விற்கப்படுகின்றன, மேலும் பட்டாசுகள் சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்படுகிறது என குற்றம்சாட்டப்பட்டது.
அதற்கு பதிலளித்த பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம், உச்சநீதிமன்றம் பசுமைப் பட்டாசுகளை விற்பதற்கு எந்தவிதமான தடை உத்தரவு பிறப்பிக்காத நிலையில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக் கூடியதாக இருக்கிறது. எனவே அந்த தடை உத்தரவை நீக்க வேண்டும் என வாதங்கள் முன்வைக்கப் பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் காற்றின் தரம் மோசமான பிரிவில் இருந்தால் மட்டுமே பட்டாசு வெடிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்களால் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என மட்டும்தான் தடை இருப்பதாகவும் பசுமைப் பட்டாசுகளை வெடிக்கவும் விற்கவும் தடை இல்லை என தெளிவுபடுத்தியிருக்கும் சூழலில் அதை எதையும் கருத்தில் கொள்ளாமல் கொல்கத்தா உயர் நீதிமன்றம் இத்தகைய உத்தரவை பிறப்பித்து இருப்பத சரியானது அல்ல. எனவே தாங்கள் அந்த உத்தரவை ரத்து செய்வதாக நீதிபதிகள் கூறினர். மேலும் பட்டாசுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, பட்டாசு வெடிக்கவே கூடாது எனவும் கூறவில்லை. மாறாக பட்டாசால் மாசு ஏற்படுவதை தடுக்க பட்டாசு உற்பத்தியில் புதிய புது யுக்தி மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்கள் என்றே கூறுகிறோம் என தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com