\
காவிரி : “எதுக்கு போராட்டம் பண்றாங்க ? அமைதி காக்க சொல்லுங்க”

காவிரி : “எதுக்கு போராட்டம் பண்றாங்க ? அமைதி காக்க சொல்லுங்க”

காவிரி : “எதுக்கு போராட்டம் பண்றாங்க ? அமைதி காக்க சொல்லுங்க”
Published on

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுக்க போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடையடைப்பு சாலை மறியல் என ஈடுபட , கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இரயில் மறியல் நடைபெற்றது. ஆளும் அதிமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில் தமிழக அரசு வழக்கறிஞர் உமாபதி மற்றொரு வழக்குக்காக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வின் முன்பு ஆஜராகி இருந்தார். தமிழக அரசு வழக்கறிஞரை கண்டு கொண்ட தலைமை நீதிபதி, என்னதான் நடக்கிறது தமிழ்நாட்டில், ஏன் அனைத்து இடங்களிலும் போராட்டம் நடக்கிறது என கேள்வி எழுப்பினார். மேலும் தமிழக அரசிடம் அமைதியை கொண்டு வர நடவடிக்கை எடுக்க சொல்லுங்கள் என அறிவுரை கூறினார்.

அதோடு “ வரும் திங்கள் கிழமை வழக்கு தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் அன்றைய தினம் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும், தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை உச்சநீதிமன்றம் பெற்றுத்தரும் எனவும் உறுதியளித்தார். அதற்கு பதிலளித்த தமிழக வழக்கறிஞர் ”உச்சநீதிமன்றத்தின் கருத்துகளை தமிழக அரசுக்கு தெரிவித்து , சட்டம் ஒழுங்கை காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com