ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடிக்கக் கோரிய வைகோ மனு தள்ளுபடி

ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடிக்கக் கோரிய வைகோ மனு தள்ளுபடி

ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடிக்கக் கோரிய வைகோ மனு தள்ளுபடி
Published on

காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்துத்தரக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த, ஆட்கொணர்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்துத்தரக்கோரி மதிமுக பொதுசெயலாளரும் எம்.பியுமான வைகோ, உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், சென்னையில் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெறும் அண்ணா மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறோம். அந்த வகையில் ஃபரூக் அப்துல்லாவை அழைக்க முற்பட்டபோது அது முடியவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்பதும் தெரியவில்லை. எனவே அவரைக் கண்டுபிடித்து தர வேண்டும்’ என வலியுறுத்தி இருந்தார்.

இந்த மனுவை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு செப்டம்பர் மாதம் மறுத்திருந்தது. இந்நிலையில் இந்த மனு மீதான இன்று விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com