"ஆடை அணிவது அடிப்படை உரிமையானால் அணியாமல் இருப்பதும் அடிப்படை உரிமைதானே?"- சுப்ரீம் கோர்ட்

"ஆடை அணிவது அடிப்படை உரிமையானால் அணியாமல் இருப்பதும் அடிப்படை உரிமைதானே?"- சுப்ரீம் கோர்ட்
"ஆடை அணிவது அடிப்படை உரிமையானால் அணியாமல் இருப்பதும் அடிப்படை உரிமைதானே?"- சுப்ரீம் கோர்ட்

ஆடை அணிவது அடிப்படை உரிமை என்று நீங்கள் சொல்வீர்களேயானால் ஆடை அணியாமல் இருப்பதும் கூட அடிப்படை உரிமையாக இருக்கும் என ஹிஜாப் வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா கருத்து தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இன்றைய தினம் வழக்கு விசாரணையின் பொழுது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அமெரிக்கா கனடா உள்ளிட்ட நாடுகளில் தலையில் துணி கட்டிக் கொள்வது அனுமதிக்கப்பட்டிருக்கிறது என மனுதாரர் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்ட போது நம் நாட்டை எதற்காக அமெரிக்காவுடனும் கனடா படனும் ஒப்பிட வேண்டும் நாம் பழமையானவர்கள் பழமையானவர்கள் என கூறியதோடு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் பொழுது அது சமூக மற்றும் கலாச்சார சூழல்களையும் சார்ந்தது எனவும் கருத்து கூறினார்.

அதேபோல ஆடை அணிவது என்பது அடிப்படை உரிமை என நீங்கள் கூறுவீர்கள் ஆனால் ஆடை இல்லாமல் இருப்பதும் அடிப்படை உரிமை ஆகும் என நீதிபதி கருத்து கூறினார். சிலுவை ருத்ராட்சம் போன்றவை மத அடையாளங்கள் தான் அவற்றை அணிந்து கொண்டு மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கு வரும்பொழுது ஹிஜாபிற்கு மட்டும் ஏன் தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பு வாதம் வைத்த போது சிலுவை ருத்ராட்சம் போன்றவை ஆடைக்கு உள்ளே மறைக்கப்படுகின்றது. அவை வெளியே தெரிவதில்லை அதே நேரத்தில் யாரும் அவர்களுடைய சட்டையை கழற்றி இவற்றை சோதிப்பதில்லை ஆனால் ஹிஜாப் என்பது வெளியே தெரியக் கூடியதாக இருக்கிறது என நீதிபதி கூறினார்.

வெளியே தெரிகிறதா இல்லையா என்பது விஷயம் அல்ல கல்வி நிலையங்களில் மத அடையாளங்கள் அணிந்து வரக்கூடாது என்பதாக ஒரு அரசு கூறும் பொழுது அது அனைத்து மதத்திற்கும் பொருந்தக் கூடியதாக இருக்க வேண்டும் என மனுதாரர் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. வாதப்பதிவாதங்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com