“சென்னை உயர் நீதிமன்றத்தின் கருத்து கடுமையானது” - உச்ச நீதிமன்றம்

“சென்னை உயர் நீதிமன்றத்தின் கருத்து கடுமையானது” - உச்ச நீதிமன்றம்

“சென்னை உயர் நீதிமன்றத்தின் கருத்து கடுமையானது” - உச்ச நீதிமன்றம்
Published on

தேர்தல் ஆணையம்மீது கொலைகுற்றம் கூட சுமத்தமுடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியது கடுமையானது என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

கொரோனா இரண்டாம் அலை உச்சத்தை தொட்டுவரும் நிலையில் பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்திலும் கொரோனா சார்ந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றன.

அதில் ஒரு வழக்கு விசாரணையின்போது, “கொரோனா விதிமுறைகள் தேர்தல் சமயத்தில் முறையாக கடைபிடிக்கப்படவில்லை; அதை தேர்தல் ஆணையமும் கட்டுப்படுத்தவில்லை. எனவே கொரோனா பரவலுக்கு காரணம் என்பதால் தேர்தல் ஆணையம்மீது கொலைகுற்றம் கூட சுமத்தலாம்” என சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாக சாடியிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துகள் எழும்பிவந்தன.

இந்த சூழலில், ’கொலைகுற்றம் கூட சுமத்தலாம்’ என்ற வார்த்தையை ஊடகங்கள் தொடர்ந்து பயன்படுத்துவதை தடை செய்யவேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

இந்த மேல் முறையீட்டு மனு விசாரணையின்போது, தேர்தல் ஆணையத்தை குற்றம்சாட்டிய சென்னை உயர் நீதிமன்றத்தின் கருத்து கடுமையானது என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

“சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கட்டுப்பாட்டை கடைபிடிக்கவேண்டும்; நீதிமன்ற விசாரணை நடைமுறைகளை செய்தியாக்கக் கூடாது என ஊடகங்களைக் கூறமுடியாது” என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அறிவுரை வழங்கிய உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணைய மனுவை தள்ளுபடி செய்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com