முல்லைப் பெரியாறு விவகாரம்: கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
நீதிமன்ற உத்தரவை மீறி முல்லைப் பெரியாறு அணையில் வாகன நிறுத்துமிடத்தை ஏன் அமைக்கிறீர்கள் என கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான தேக்கடி ஆனைவாசல் பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்துமிடம் கட்டலாம் என்று கடந்த 15–ந்தேதி தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே வாகன நிறுத்தம் அமைக்க நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.
இந்நிலையில், முல்லைப்பெரியாறு வாகன நிறுத்துமிடம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவை பின்பற்ற மாட்டீர்களா? உத்தரவை மீறி எதற்காக கட்டுமானப்பணி மேற்கொள்கிறீர்கள்? என்று கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இருமாநில பிரச்னையில் உச்சநீதிமன்ற உத்தரவைகூட பின்பற்ற மாற்றீர்களா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.