ஆதார் தீர்ப்பை கூடங்குளம் அணு உலையோடு ஒப்பிட்ட உச்சநீதிமன்றம்

ஆதார் தீர்ப்பை கூடங்குளம் அணு உலையோடு ஒப்பிட்ட உச்சநீதிமன்றம்
ஆதார் தீர்ப்பை கூடங்குளம் அணு உலையோடு ஒப்பிட்ட உச்சநீதிமன்றம்

ஆதார் சட்டம் செல்லும் என்றும் அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதாரை பயன்படுத்த அனுமதித்தும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கூடங்குளம் அணு உலை தொடர்பாக பிறப்பித்த உத்தரவை மேற்கோள் காட்டியுள்ளது. அது தீர்ப்பின் முக்கிய அம்சமாகவும் உள்ளது. 

கூடங்குளம் அணு உலை மக்களை பாதிப்பதாக அமைந்துள்ளது என்றும் அது வாழ்வதற்காக அடிப்படை உரிமையை மீறக் கூடிய ஒன்றாக உள்ளது எனவும் கூறி வழக்கறிஞர் சுந்தர்ராஜன் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன் அமர்வு “அணு உலையை மூட உத்தரவிட முடியாது” என தீர்ப்பளித்திருந்தது

அதே தீர்ப்பில் உச்சநீதிமன்றம் “மக்கள் வாழ்வதற்கான அடிப்படை உரிமையை மீறுவதாக அணு உலை அமைந்திருக்கும் விவகாரத்தை பார்த்தாலும், பொருளாதார வளர்ச்சிக்கு அது வழிவகுக்கும், அணு உலையை மூட உத்தரவிடுவதை விட அது எப்படி பாதுகாப்பான ஒன்றாக மாற்றி, வளர்ச்சிக்கு வழிவகை செய்ய முடியும் என்றே பார்க்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தது.

உச்சநீதிமன்றத்தில் அந்த தீர்ப்பு கருத்துகளை ஆதார் தீர்ப்பு வழங்கிய அமர்வு எடுத்துக் கொண்டுள்ளது. தனிநபர் சுதந்திரம், தகவல்கள் பாதுகாப்பு போன்றவற்றில் சில சிக்கல்கள் இருந்தாலும், முறையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதால் உரிய பாதுகாப்பினை மேற்கொண்டு, ஆதாரை அனுமதிப்பதே சரி” என கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com