வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை உண்டா?: விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட தேர்தல் சட்டத்தை அமல்படுத்தும் எண்ணம் இருக்கிறதா என்பது குறித்து ஒருவாரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக நாகேந்தர் சிந்தம், ஷம்சீர் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹெர் மற்றும் டி.ஒய்.சந்திரசௌத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்கும் வகையில் 1950ம் ஆண்டு இயற்றப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பினர் ஒப்புக்கொண்டுள்ளதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இந்த விவகாரம் தொடர்பாக கொள்கைரீதியிலான ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், அதை நடைமுறைப்படுத்துவது மட்டுமே தற்போதைய சிக்கல் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.