இந்தியா
ராஜிவ் கொலை வழக்கில் வெடிகுண்டு பற்றி விரிவாக விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி
ராஜிவ் கொலை வழக்கில் வெடிகுண்டு பற்றி விரிவாக விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி
ராஜிவ் கொலை வழக்கை விசாரித்து வரும் எம்டிஎம்ஏ, வெடிகுண்டைத் தயார் செய்தது யார் என்று இதுவரை விசாரிக்காதது ஏன் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ராஜிவ் கொலை வழக்கில் எம்டிஎம்ஏ என்ற சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு குறித்து விரிவாக விசாரணை மேற்கொள்ளப்படாதது ஏன் என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
பேரறிவாளன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது இந்தக் கேள்வியை எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டுள்ளது. ராஜிவ் கொலை வழக்கை விசாரித்து வரும் எம்டிஎம்ஏ, வெடிகுண்டைத் தயார் செய்தது யார் என்று இதுவரை விசாரிக்காதது ஏன்? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

