இந்தியா
பொங்கல் பண்டிகைக்கு முதன்முறையாக உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை
பொங்கல் பண்டிகைக்கு முதன்முறையாக உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை
2021 ஜன.14ஆம் தேதி பொங்கல் பண்டிகை அன்று உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உழவர்களின் உழைப்பை போற்றும் வகையில், தமிழகத்தில் விமர்சையாக கொண்டாடப்படும் விழா பொங்கல் பண்டிகை. சூரியனுக்கும் மற்ற விவசாயத்திற்கு பயன்படுத்து மாடு, ஆடு ஆகிய உயிரினங்களுக்கு நன்றி சொல்லும் வகையில் 3 நாட்கள் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மகரசங்கராந்தி என்ற பெயரில் பல்வேறு வடிவங்களில் மக்கள் பொங்கல் பண்டியை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், 2021 ஜன.14ஆம் தேதி பொங்கல் பண்டிகை அன்று உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை அன்று உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.