”ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்த தடை எதுவும் இல்லை” - உச்சநீதிமன்றம் உத்தரவு

17ம் நூற்றாண்டு மத்தியில் கட்டப்பட்ட ஞானவாபி மசூதியானது ஏற்கனவே இருக்கும் கட்டமைப்பின் மீது கட்டப்பட்டதா என்பதைக் கண்டறிய இவ்வாய்வானது மேற்கொள்ளப்படுகிறது.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஞானவாபி மசூதியில் ஆய்வை தொடங்கிய தொல்லியல் துறையினர்!

இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) இன்று காசி விஸ்வநாதர் கோயிலின் அருகே உள்ள ஞானவாபி மசூதியில் விரிவான அறிவியல் ஆய்வைத் தொடங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

17ம் நூற்றாண்டு மத்தியில் கட்டப்பட்ட ஞானவாபி மசூதியானது ஏற்கனவே இருக்கும் கட்டமைப்பின் மீது கட்டப்பட்டதா என்பதைக் கண்டறிய இவ்வாய்வானது மேற்கொள்ளப்படுகிறது.

காலை 7 மணிக்குத் தொடங்கிய இப்பணியானது, கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் ASI குழு உறுப்பினர்கள், மற்றும் மசூதி தொடர்பான சட்ட எதிர்ப்பாளர்கள், இந்து மனுதாரர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கணக்கெடுப்பின் போது இவ்வளாகத்திற்குள் இருந்தனர். அஞ்சுமன் இண்டெஜாமியா மஸ்ஜித் (ஏஐஎம்) குழு உறுப்பினர்கள் இவ்வாய்வை புறக்கணித்துள்ளனர்.

இதனிடையே, ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்த தடை எதுவும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

”ஒட்டுமொத்த ஆய்வு எந்த விதமான சேதாரமும் ஏற்படாமல் மேற்கொள்ளப்படும்; அகழ்வாய்வு எதுவும் செய்யப்படாது” என இந்திய தொல்லியல் துறை கொடுத்துள்ள உறுதி மொழியின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com