அயோத்தி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

அயோத்தி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

அயோத்தி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
Published on

அயோத்தி விவகாரம் தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. 

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. அப்போது அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலப் பகுதியை சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதம் 27-ஆம் தேதி இந்த மனுக்களை ஆராய்ந்த அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில், மசூதி என்பது முஸ்லிம் மதத்தின் ஒரு அங்கம் அல்ல என தெரிவிக்கப்பட்டிருப்பதை மறுபரிசீலனை செய்ய, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் முந்தைய தீர்ப்பு பொருந்தாது என தெரிவித்து, நிலத்தின் உரிமை குறித்து சிவில் அமர்வு அக்டோபர் 29-ஆம் தேதி முடிவு செய்யும் எனத் தெரிவித்தனர். அதன்படி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கெளல், கே.எம்.ஜோசப் ஆகியோரைக் கொண்டு அமர்வு இன்று மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்கும் தெரிவிக்கப் பட்டிருந்தது. அதன் படி இந்த வழக்கு இன்ரு விசாரணைக்கு வந்தது. 

வழக்கை மீண்டும் ஒத்தி வைத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு,  ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் விசாரிக் கப்படும் என உத்தரவிட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com