\
தொகுதியை கவனிக்க பிரதிநிதி - சர்ச்சையில் சன்னி தியோல்

தொகுதியை கவனிக்க பிரதிநிதி - சர்ச்சையில் சன்னி தியோல்

தொகுதியை கவனிக்க பிரதிநிதி - சர்ச்சையில் சன்னி தியோல்
Published on: 

எம்.பி ஒருவர் தன் தொகுதி சார்ந்த பணிகளை கவனிக்க பிரதிநிதியை நியமித்தது கடும் விமர்சனத்திற்கு வித்திட்டுள்ளது.

நடிப்பில் இருந்து அரசியல் களத்திற்கு வந்தவர் சன்னி தியோல். இவர் கடந்த மக்களவைத் தேர்தலின்போது பாஜக சார்பில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் தன் தொகுதி சார்ந்த பணிகளை கவனிக்க தனக்கு பதிலாக பிரதிநிதி ஒருவரை நியமித்துள்ளார். அதாவது தனது தொகுதி சம்பந்தப்பட்ட கூட்டங்களில் பங்கேற்க குர்பீத் சிங் பல்கேரி என்பரை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

பொதுவாக தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் மக்களின் குறைகளை கேட்டறிந்து, அதனை சரிசெய்ய மக்களின் பிரதிநிதிகளாக செயல்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியே, தன் தொகுதிக்குட்பட்ட பணிகளை கவனிக்க பிரதிநிதியை நியமித்தது கடும் விமர்சனத்திற்கு வித்திட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com