\
Sunetra Ajit Pawar Won on Maharashtra BARAMATI Bye Election
சுனேத்ரா பவார்x page

பாராமதி இடைத்தேர்தல்.. அஜித் பவார் மனைவி அபார வெற்றி!

மாநில வரலாற்றில் இந்தப் பதவியை வகித்த முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.
Published on: 

அஜித் பவார் எட்டு முறை எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியான பாராமதியிலிருந்து சுனேத்ரா பவார் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். இந்த தேர்தலில் அவர், 2,18,968 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மகாராஷ்டிரா மாநில துணை முதல்வருமாக இருந்த அஜித் பவார், கடந்த ஜன.28ஆம் தேதி காலை விமான விபத்தின்போது உயிரிழந்தார். இந்த விபத்தைத் தொடர்ந்து மறைந்த அஜித் பவாரின் மனைவி சுநேத்ரா பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக, ஜனவரி 31 அன்று சுநேத்ரா பவார் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன்மூலம் மாநில வரலாற்றில் இந்தப் பதவியை வகித்த முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.

Sunetra Ajit Pawar Won on Maharashtra BARAMATI Bye Election
அஜித் பவார். சுனேத்ரா பவார் Pt web

இதையடுத்து, அஜித் பவார் எட்டு முறை எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியான பாராமதியிலிருந்து சுனேத்ரா பவார் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் ஆகாஷ் மோரே களமிறக்கப்பட்டார். எனினும், காங்கிரஸ் கட்சி இத்தேர்தலிலிருந்து விலகியது. அதேநேரத்தில், சுநேத்ரா பவாரை எதிர்த்து பல சுயேச்சைகளும் ஹிந்துஸ்தான் ஜனதா கட்சியைச் சேர்ந்த சதீஷ் கிருஷ்ணா கதமும், புதிய ராஷ்டிரிய சமாஜ் கட்சியின் குதுக்கடே சரும் நின்றனர். இந்த நிலையில், நேற்று நடைபெற்ற முடிவுகளின் அடிப்படையில் சுநேத்ரா பவார் 2,18,968 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com