சுட்டெரிக்கும் வெயில்: உயர்கிறதா குளிர்சாதனங்களின் விலை?

சுட்டெரிக்கும் வெயில்: உயர்கிறதா குளிர்சாதனங்களின் விலை?
சுட்டெரிக்கும் வெயில்: உயர்கிறதா குளிர்சாதனங்களின் விலை?

குளிர்சாதன இயந்திரங்களின் விலை ஜூலையிலிருந்து 7 முதல் 10 சதவிகிதம் உயர உள்ளது.

குளிர்சாதன இயந்திரங்களின் மின்சார சேமிப்பு திறனை பொறுத்து அவற்றுக்கு நட்சத்திர குறியீடு வழங்கும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது. அவ்விதிகள் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் மாற்றப்படுகின்றன. இதன்படி தற்போது 5 நட்சத்திர குறியீடு உள்ள குளிர்சாதன இயந்திரங்களுக்கு இனி 4 நட்சத்திர குறியீடு மட்டுமே வழங்கப்படும். 

மின்சாரத்தை மிக அதிகளவு சேமிக்கும் இயந்திரங்களுக்கு 5 நட்சத்திர குறியீடு வழங்கப்படும். இதற்கேற்ப தொழில்நுட்ப மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளதால் குளிர்சாதன இயந்திரங்கள் விலை அதிகரிக்கப்பட உள்ளது. குளிர்சாதன இயந்திரங்களை தொடர்ந்து குளிர்சாதன பெட்டிகளுக்கும் வரும் ஜனவரி முதல் நட்சத்திர குறியீட்டு விதிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com