\
பெங்களூரில் சுதந்திரமாக சுற்றித்திரிந்த சுகேஷ்: உதவிய காவலர்கள் கைது

பெங்களூரில் சுதந்திரமாக சுற்றித்திரிந்த சுகேஷ்: உதவிய காவலர்கள் கைது

பெங்களூரில் சுதந்திரமாக சுற்றித்திரிந்த சுகேஷ்: உதவிய காவலர்கள் கைது
Published on

இரட்டை இலை சின்னம் வழக்கு தொடர்பாக டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகருக்கு உதவியதாக இரண்டு காலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு மட்டுமல்லாமல் சுகேஷ் மீது மும்பை, டெல்லி, கோவை ஆகிய பகுதிகளில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் மோசடி வழக்கு தொடர்பாக சுகேஷை கோவைக்கு அழைத்து செல்லும்போது, பெங்களூர் வழியாக சென்றுள்ளனர். அப்போது குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே பெங்களூருவை அடைந்துவிட்டதால், அங்கு சுகேஷ் காவல்துறையின் பாதுகாப்பு இல்லாமல் சுற்றித்திரிந்து, சொகுசுக்கார் வாங்கியதாகவும், சிலரிடம் பணம் பெற்றதாகவும் வருமான வரித்துறையினர் புகார் அளித்தனர்.

இதனையடுத்து சுகேஷூடன் பாதுகாப்புக்கு சென்ற ஏழு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தற்போது டெல்லி மாநகர காவல் ஆணையரின் உத்தரவின்படி இரண்டு காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com