\
சுகேஷ் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு

சுகேஷ் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு

சுகேஷ் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு
Published on

இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில் கைதான இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஜாமீன் கோரி மீண்டும் மனு செய்துள்ளார். 

டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் சுகேஷ் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரட்டை இலைச் சின்னத்தைப் பெற்றுத் தருவதாக டிடிவி தினகரனிடம் பெருந்தொகையை பெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில் சுகேஷ் சந்திரா கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் ஜாமீன் கேட்டு கடந்த 22ம் தேதி விண்ணப்பித்தார். ஆனால் இம்மனுவை நீதிபதி நிராகரித்துவிட்டார். இவ்வழக்கில் டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோர் ஜாமீன் கிடைத்துள்ள நிலையில், தற்போது மீண்டும் சுகேஷ் சந்திரசேகர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com