ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!
Published on

கர்நாடகாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலம் மைசூர் அருகில் உள்ள தட்டாஹள்ளியைச் சேர்ந்தவர் ஓம் பிரகாஷ் (36). நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவர் தந்தை நாகராஜ் பட்டாச்சார்யா (65). அம்மா, ஹேமலதா. மனைவி நிகிதா (28). மகன் ஆர்ய கிருஷ்ணா (4 வயது). கடந்த சில மாதங்களாக ஓம் பிரகாஷூக்கு தொழிலில் நஷ்டம்.

இந்நிலையில் மைசூரு-ஊட்டி சாலையில் குண்டுலுபேட்-டில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு சில நாட்களுக்கு முன் குடும்பத்துடன் வந்தார் பிரகாஷ். அங்கு தங்கியிருந்த அவர், இன்று காலை குடும்பத்தினரை துப் பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு, தானும் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 

இதையடுத்து ஓட்டல் நிர்வாகத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் விரைந்து வந்தனர். உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆரம்பக்கட்ட விசாரணையில் கடன் பிரச்னை காரணமாக இந்த தற்கொலை நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சுட்டுத் தற்கொலை செய்திருப்பது அந்தப் பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com