Infosys சுதா மூர்த்தி மாநிலங்களவை உறுப்பினராக நியமனம்!

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுதா மூர்த்தி
சுதா மூர்த்தி ட்விட்டர்

நாட்டின் முன்னணி ஐ.டி. நிறுவனமாக விளங்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை தொடங்கியவர்களில் நாராயண மூர்த்தியும் ஒருவர். இவரது மனைவியும், இன்ஃபோசிஸ் அறக்கட்டளை தலைவருமான சுதா மூர்த்தி தற்போது மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுதா மூர்த்தியை மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

சுதா மூர்த்தி
”Article 370ஐ ரத்து செய்ததை விமர்சிக்க ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரிமை உண்டு” - உச்சநீதிமன்றம்

இதனை சுட்டிக்காட்டி, சுதா மூர்த்தியின் புகைப்படத்துடன் பிரதமர் மோடி வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில், ”சுதா மூர்த்தி மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறோம். நாட்டின் சமூகப் பணி, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுதா மூர்த்தியின் பங்களிப்பு மகத்தானது.

இவரது வரவு நமது "மகளிர் சக்தி"க்கு ஒரு சக்தி வாய்ந்த சான்று. சுதா மூர்த்தியின் நியமனம் நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெண்களின் வலிமை மற்றும் திறமையை எடுத்துக்காட்டுகிறது” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com