\
திடீரென திறந்த அவசர கால கதவு! ஓடும் பேருந்துக்குள் இருந்து சாலையில் தவறி விழுந்த குழந்தை!

திடீரென திறந்த அவசர கால கதவு! ஓடும் பேருந்துக்குள் இருந்து சாலையில் தவறி விழுந்த குழந்தை!

திடீரென திறந்த அவசர கால கதவு! ஓடும் பேருந்துக்குள் இருந்து சாலையில் தவறி விழுந்த குழந்தை!
Published on

கேரளாவில் பள்ளி பேருந்தில் இருந்து குழந்தை ஒன்று சாலையில் தவறி விழுந்து விபத்துக்குள்ளானது.

எர்ணாகுளம் அடுத்த ஆலுவாயில் சாலையில் சென்று கொண்டிருந்த பள்ளி பேருந்தின் அவசர கால கதவு திடீரென்று திறந்துள்ளது. இதனால் பேருந்துக்குள் இருந்த குழந்தை ஒன்று சாலையில் விழுந்தது. நல்வாய்ப்பாக அக்கம்பக்கத்தினர் பார்த்து மீட்டதால், குழந்தை உயிருடன் தப்பியது.

கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இந்நிலையில், விபத்து குறித்து ஆலுவா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com