குஜராத் தேர்தல் நூலிழையில் வெற்றி - தோல்வி

குஜராத் தேர்தல் நூலிழையில் வெற்றி - தோல்வி

குஜராத் தேர்தல் நூலிழையில் வெற்றி - தோல்வி
Published on

குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 16 தொகுதிகளில் வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் 200 முதல் 2000 வாக்குகளாகவே இருந்துள்ளன.

குஜராத்தில் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. இந்த தேர்தலில் 6 தொகுதிகளில் வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் 200 முதல் 2000 வாக்குகளாகவே இருந்துள்ளன. குறிப்பாக, டோக்லா மற்றும் பேத்புரா தொகுதிகளில் சிறிய கட்சிகளாக செயல்படும் தேசியவாத காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் முக்கியமான வாக்குகளை பறித்து காங்கிரஸின் வெற்றியை தடுத்துள்ளன. சில தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்களும் வாக்குகளை பிரித்துள்ளனர். 

ஹிமாத்நகர், போர்பந்தர்‌, விஜாபூர், தியோதர், தாங்ஸ், மான்சா மற்றும் கோத்ராவில் பா.ஜ.க. - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியுள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள், எதிர்ப்பாளர்கள் என இரண்டு பெரிய கட்சிகளின் வாக்கை வெகுவாக பிரித்துள்ளனர்.

8 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் 2000 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்திலே தோல்வியை தழுவி உள்ளனர். டோல்கா தொகுதியில் காங்கிரஸ் கட்சி 327 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இத்தொகுதியில் பகுஜன் சமாஜ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் முறையே 3139 மற்றும் 1198 வாக்குகளை பிரித்தது. 

பேத்புரா தொகுதியில் பா.ஜ.க. 2711 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கு தேசியவாத காங்கிரஸ் 2747 வாக்குகள் பெற்றது. போடாட் தொகுதியில் காங்கிரஸ் 906 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இங்கு பகுஜன் சமாஜ் 966 வாக்குகளையும், மூன்று சுயேச்சைகள் மொத்தமாக 7500 வாக்குகளையும் பெற்றனர். எஸ்.டி. தொகுதிகளான தாங்ஸிஸ் 768 வாக்குகள் வித்தியாசத்திலும், கப்ராடா‌ தொகுதியில் 170 வாக்குகள் வித்தியாசத்திலும் காங்கிரஸ் வெற்றிபெற்றது. மன்சா தொகுதியில் 524 வாக்குகள் வித்தியாசத்திலும், தியோதர் தொகுதியில் 972 வாக்குகள் வித்தியாசத்திலும் பா.ஜ.க. தோல்வியடைந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com