மானியங்களை அடுத்த நிதியாண்டிற்குள் முற்றிலும் நீக்குவதற்காக ஒவ்வொரு மாதமும் மானிய சிலிண்டரின் சராசரியாக ரூ.4 விலை உயர்த்தப்படும் என்று கடந்த ஜூலை மாதம் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில், 14.2 கிலோகிராம் எடையுள்ள மானிய சிலிண்டரின் விலையை ரூ.7 உயர்த்தி இந்தியன் ஆயுள் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. இந்தவிலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி மானிய சிலிண்டரின் விலை ரூ.2.31 உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வை அடுத்து டெல்லியில் மானிய சிலிண்டரின் விலை ரூ.487.18 ஆக இருக்கும். டெல்லியில் விமான எரிவாயு ரூ.50,020 ஆக உயர்ந்துள்ளது. விலை உயர்வுக்கு முன் ரூ.48,110 ஆக இருந்தது.
விலை உயர்வை அடுத்து சென்னையில் மானிய விலையிலான சிலிண்டர் ரூ.475.26-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் மானிய விலையில்லா சிலிண்டர் ரூ.1167 ஆக உள்ளது.