Subrata Gupta appointed is CM Suvendu Adhikaris advisor
சுப்ரதா குப்தாx page

மேற்கு வங்கம் | முதல்வரின் ஆலோசகராக சுப்ரதா குப்தா நியமனம்.. யார் இவர்?

அவருடைய நீண்டகால அரசு நிர்வாக அனுபவம், கொள்கை ஒருங்கிணைப்பு மற்றும் ஆளுகை தொடர்பான விஷயங்களில் அரசுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published on

முதலமைச்சர் சுவேந்து அதிகாரியின் ஆலோசகராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சுப்ரதா குப்தா நியமிக்கப்பட்டிருப்பது மேற்கு வங்கத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

294 தொகுதிகளைக் கொண்ட (புகார் காரணமாக ஃபால்டா சட்டமன்றத் தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது) மேற்கு வங்க சட்டமன்றத்தில் பாஜக 207 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. மம்தா பானர்ஜியின் கோட்டையாகக் கருதப்பட்ட பபானிபூர் தொகுதியிலேயே அவரை வீழ்த்திய சுவேந்து அதிகாரி, மாநிலத்தின் முதலமைச்சராக இன்று பதவியேற்றார். இந்த நிலையில், முதலமைச்சர் சுவேந்து அதிகாரியின் ஆலோசகராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சுப்ரதா குப்தா நியமிக்கப்பட்டிருப்பது மேற்கு வங்கத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. புதிய அரசு, முதலமைச்சர் அலுவலகத்தையும் முக்கிய நிர்வாகப் பதவிகளையும் மறுசீரமைத்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுவேந்து அதிகாரி, சுப்ரதா குப்தா
சுவேந்து அதிகாரி, சுப்ரதா குப்தாஎக்ஸ் தளம்

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக நடைபெற்ற சிறப்பு வாக்காளர் பட்டியல் (SIR) பணிக்காக, தேர்தல் ஆணையத்தால் சிறப்புப் பட்டியல் கண்காணிப்பாளராகப் பணியமர்த்தப்பட்டவர்தான் இந்த சுப்ரதா குப்தா. அவருடைய நீண்டகால அரசு நிர்வாக அனுபவம், கொள்கை ஒருங்கிணைப்பு மற்றும் ஆளுகை தொடர்பான விஷயங்களில் அரசுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subrata Gupta appointed is CM Suvendu Adhikaris advisor
மேற்கு வங்கம்| புதிய முதல்வராக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி.. யார் இவர்.?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com