இந்தியா
ட்விட்டர் தாக்குதல்: சுப்பிரமணியன் சுவாமி இறுதி எச்சரிக்கை!
ட்விட்டர் தாக்குதல்: சுப்பிரமணியன் சுவாமி இறுதி எச்சரிக்கை!
பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருக்கும் அமித் மால்வியா நாளைக்குள் பொறுப்பிலிருந்து நீக்கப்படாவிட்டால், கட்சி என்னை பாதுகாக்க விரும்பவில்லை என்பதாகத்தான் அர்த்தம் என்று தெரிவித்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.
முன்னதாக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு கட்சியின் கட்டுப்பாட்டை இழந்து செயல்படுவதாகவும், பாஜக உறுப்பினர்கள் சிலர் போலி ட்விட்டர் ஐடிக்கள் மூலம் தனிப்பட்ட முறையில் தன்னை தாக்கி பதிவிட்டு வருவதாகவும் இதற்கு பின்னால் மால்வியாவின் சதி வேலைகள் இருக்கின்றது என்றும் சரமாரியாக குற்றஞ்சாட்டி இருந்தார்.
இந்நிலையில் பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருக்கும் அமித் மால்வியா நாளைக்குள் பொறுப்பிலிருந்து நீக்கப்படாவிட்டால், கட்சி என்னை பாதுகாக்க விரும்பவில்லை என்பதாகத்தான் அர்த்தம் என்று கூறி பாஜகவின் ஐடி பிரிவை அதிர வைத்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.