
வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முல்லைப் பெரியாறு அணையில் துணைக் கண்காணிப்பு குழுவினர் இன்று ஆய்வு செய்ய உள்ளனர். மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையிலான ஐவர் கொண்ட துணைக் கண்காணிப்புக்குழு ஆய்வு மேற்கொள்ள உள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மூவர் கண்காணிப்புக்குழுவிற்கு உறுதுணையாக, ஐந்து பேர் கொண்ட துணை கண்காணிப்புக்குழு உருவாக்கப்பட்டது. துணைக்குழுவின் ஆய்வு கடந்த ஜூலை 10ஆம் தேதி நடைபெற்ற நிலையில், மூன்று மாதங்களுக்கு பிறகு இன்று ஆய்வு நடைபெற உள்ளது.