இந்தியா
பாலியல் வன்கொடுமை செய்தவரை பெல்ட்டால் விளாசிய எஸ்.ஐ: வைரலாகும் வீடியோ!
பாலியல் வன்கொடுமை செய்தவரை பெல்ட்டால் விளாசிய எஸ்.ஐ: வைரலாகும் வீடியோ!
பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதானவரை சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் பெல்ட்டால் அடித்து துன்புறுத்தும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் மாவோ நகரில் பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து, காவல்நிலையத்துக்கு அழைத்து வந்துள்ளனர். பின்னர் அந்த இளைஞரை தூண் அருகே நிற்க வைத்து காவல்துறை எஸ்.ஐ. பெல்ட்டால் அடித்து துன்புறுத்தியுள்ளார்.
அங்கிருந்த சிலர் இதனை படம்படித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ காட்சி வைரலாக பரவி வருவதை அடுத்து சம்பந்தப்பட்ட அந்த அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.