என்னா ஒரு டெக்னாலஜி... நூதன முறையில் பிட் அடித்த மாணவர்

என்னா ஒரு டெக்னாலஜி... நூதன முறையில் பிட் அடித்த மாணவர்

என்னா ஒரு டெக்னாலஜி... நூதன முறையில் பிட் அடித்த மாணவர்
Published on

டெக்னாலஜி வளர வளர மாணவர்களின் புத்திக் கூர்மையும் அதிகரித்து வருகிறது என்றே சொல்லலாம். அத்தகைய புத்திசாலித்தனத்தை நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும். ஆனால் தனது கனகச்சிதமான புத்திசாலித்தனத்தால் நூதன முறையில் மாணவர் ஒருவட் பிட் அடித்திருக்கிறார். சமூக வலைத்தளங்களில் அவர் பிட் அடித்துள்ளது டாப் ட்ரெண்டாகி வருகிறது. அந்த அளவிற்கு அவர் வித்தியாசமான முறையை கையாண்டிருக்கிறார். அது எப்படித் தான் என்பதை நாமும் தெரிந்து கொள்வோமே.

கார்ட்டூன் பொம்மைகள் ஒட்டப்பட்ட எக்ஸாம் பேட் ஒன்றை வாங்கியிருக்கிறார். அதில் வரையப்பட்ட ஒரு கார்ட்டூன் பொம்மையை தனது மொபைல் போனில் படம்பிடித்து அதனை தனது ஸ்கீரின் சேவராகவும் ஆக்கிக் கொண்டார். பின்னர், அந்த கார்ட்டூன் பொம்மையை அப்படிய அந்த ‘பேட்’டில் இருந்து வெட்டி எடுத்துவிட்டு அதில், கார்ட்டூன் பொம்மை ஸ்கீரின் சேவராக்கப்பட்ட தனது மொபைலை அழகாக அதில் பொருத்தியுள்ளார். இப்போது எக்ஸாம் பேட்டுன் தனது மொபைலை பொருத்தியாச்சு. எக்ஸாம் பேடிலும் கார்ட்டூன் பொம்மை.. பேடில் பொருத்தப்பட்ட மொபைலின் ஸ்கீரின் சேவரும் கார்ட்டூன் பொம்மையான இருப்பதால் அதனை கண்டுபிடிக்க முடியாது என நினைத்திருக்கிறார்.

ஏற்கனவே தனக்கு தேவையான பிட் பேப்பர்களையெல்லாம் போட்டாவாக எடுத்துக் கொண்டு அதனை மொபைலில் சேவ் செய்து வைத்திருக்கிறார். இப்போது எக்ஸாம் பேடில் பொருத்தப்பட்ட மொபைலை யூஸ் செய்து தனக்கு தேவையான கேள்விகளுக்கு நூதன முறையில் விடை காண முயற்சித்திருக்கிறார். ஆனால் மாணவரின் தந்திரத்தை எப்படியும் அறிந்துவிடும் தேர்வறை ஆசிரியர்கள் அவரின் கள்ளத்தனத்தை கண்டுபிடித்துவிட்டனர். இந்த நூதன முறை பிட் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com