ஹிதயதுல்லா பல்கலைக் கழக மாணவர் போராட்டம் - காரணம் என்ன?

ஹிதயதுல்லா பல்கலைக் கழக மாணவர் போராட்டம் - காரணம் என்ன?
ஹிதயதுல்லா பல்கலைக் கழக மாணவர் போராட்டம் - காரணம் என்ன?

சட்டீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் நகரில் உள்ள ஹிதயதுல்லா தேசிய சட்ட பல்கலைக் கழக துணை வேந்தர் சுக் பால் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது சட்ட விரோதமானது என சட்டீஸ்கர் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சுக் பால் மேல் முறையீடு செய்வதாக தகவல் கிடைத்ததை அடுத்து, சட்டப் பல்கலைக் கழக மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். துணை வேந்தர் சுக் பால் உடனடியாக பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி கல்லூரி வளாகம் முன்பாக மாணவர்கள் 27ம் தேதி இரவே போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டீஸ்கர் அரசின் முதன்மை செயலாளர் ரவி சங்கர் சர்மா இடைக்கால துணை வேந்தராக நியமிக்கப்பட்டார். 

துணை வேந்தர் பிரச்னை முடியும் தருவாயில், விடுதி பிரச்னை கல்லூரியின் வெடித்தது. விடுதி வார்டன்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக பெண்கள் விடுதி வார்டன்கள் மீது மாணவிகள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்களை முன் வைத்தனர். ஆடை கட்டுப்பாடு, வளாகத்தில் உள்ள பொதுவான இடங்களில் நடமாடக் கூடாது என்பன உள்ளிட்டவை குறித்து மாணவிகள் பல்வேறு புகார்களை கூறினர். மாணவிகள் தங்கள் விடுதிக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் மாணவர்களும் போராட்டத்தில் ஒன்றிணைந்தனர். 

சுமார் 14 கோரிக்கைகளை முன் வைத்து மாணவர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். ராய்ப்பூர் தேசிய சட்ட பல்கலைக் கழகம்மாணவர்களின் இந்தப் போராட்டத்திற்கு நல்சர் சட்டப் பல்கலைக் கழகம், தேசிய சட்டப் பள்ளி, போபால் தேசிய சட்ட நிறுவனம், ஜெய்ப்பூர் சட்டப் பல்கலைக் கழகம் உள்ளிட்டவற்றை சேர்ந்த மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மாணவர்கள் அமைப்பினர் துணை வேந்தருடன் செப்டம்பர் 5ம் தேதி சந்தித்து பேசவுள்ளார்.  இந்தச் சந்திப்புக்கு பின்னர் அடுத்து என்ன செய்வது என முடிவு செய்யப்படும் என மாணவர்கள் தெரிவித்தனர். மாணவர்களின் இந்தப் போராட்டம் தொடர்பாக #HNLUKiAzaadi என்ற ஹேஸ்டேக் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com