மூணாறில் தமிழ்வழி பயிலும் மாணவர்களின் சிரமம்: மொபைல் சிக்னலுக்காக மலைகளை நாடும் அவலம்

மூணாறில் தமிழ்வழி பயிலும் மாணவர்களின் சிரமம்: மொபைல் சிக்னலுக்காக மலைகளை நாடும் அவலம்
மூணாறில் தமிழ்வழி பயிலும் மாணவர்களின் சிரமம்: மொபைல் சிக்னலுக்காக மலைகளை நாடும் அவலம்

கேரள மாநிலம் மூணாறைச் சுற்றிலும் உள்ள எஸ்டேட் பகுதிகளில் தமிழ் வழி கல்வி பயிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு "ஆன்லைன்" வகுப்புகள் இந்த ஆண்டும் எட்டாக்கனியாகவே மாறியிருக்கின்றன. காரணம் என்ன? பார்க்கலாம் இந்தத்தொகுப்பில்.

பச்சைப்பசேல் என இயற்கை வனப்பும், குளுமையும் விரவிக்கிடக்கும் மூணாறில், மலை உச்சியிலும், உயரமான முகடுகளிலும் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார்கள் மாணவர்கள். மூணாறு கல்வி மாவட்டத்தில் ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை மூவாயிரத்திற்கும் அதிகமான மாணவ மாணவியர் தமிழ் வழியில் படிக்கும்நிலையில், நகரை விட்டு மலைகள் சூழ இருக்கும் தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தொலை தொடர்பு வசதி மட்டும் உள்ளது.

நகரை கடந்து ராஜமலை, தேவிகுளம், பெரியபாறை, புதுகாடு, ஆனைமுடி, சைலண்டுவேலி, குண்டுமலை எஸ்டேட் பகுதிகளில் இந்த மொபைல் ஃபோன் சிக்னல் கிடைப்பதில்லை. இதனால், மூணாறு எஸ்டேட் பகுதிகளைச் சுற்றியுள்ள தமிழ்வழி பயிலும் மாணவ, மாணவியர் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com