\
ஜீன்ஸ் பேன்ட் மாணவனுக்கு கத்திரி வெட்டு: பள்ளி நிர்வாகிகள் மீது வழக்கு

ஜீன்ஸ் பேன்ட் மாணவனுக்கு கத்திரி வெட்டு: பள்ளி நிர்வாகிகள் மீது வழக்கு

ஜீன்ஸ் பேன்ட் மாணவனுக்கு கத்திரி வெட்டு: பள்ளி நிர்வாகிகள் மீது வழக்கு
Published on

பள்ளிக்கு சீருடை அணியாமல் ஜீன்ஸ் பேன்ட் அணிந்து வந்ததால், மாணவனை நிர்வாகிகள் கத்திரிக்கோலால் குத்தி காயப்படுத்தியுள்ளனர். 

உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ளது சிங்கந்தர் கிராமம். இங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படிக்கும் மாணவன் அனுஜ் குமார். சீருடை அழுக்காக இருந்ததால் மாணவன் அனுஜ், சமீபத்தில் ஜீன்ஸ் பேன்ட் அணிந்து பள்ளிக்கு சென்றார் அனுஷ். ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர், மாணவனின் பேன்ட்டை கத்திரிக் கோலால் வெட்டினார். அப்போது, மாணவனின் இரண்டு கால்களிலும் வெட்டுக் காயம் ஏற்பட்டது. பின், அனுஜை, பள்ளி காவலாளியுடன் வீட்டுக்கு அனுப்பினார். ரத்தக் காயத்துடன் வந்த மகனைக் கண்டு அனுஜின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com