\
காதலன் பேசலையே: நர்சிங் மாணவி தற்கொலை!

காதலன் பேசலையே: நர்சிங் மாணவி தற்கொலை!

காதலன் பேசலையே: நர்சிங் மாணவி தற்கொலை!
Published on

காதலன் பேசவில்லை என்பதால் வெறுப்படைந்த நர்சிங் மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

பெங்களூர் அருகே உள்ள திப்பகோனடனஹள்ளியில் நர்சிங் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் படித்துவருகின்றனர். மேற்கு வங்கத்தை சேர்ந்த ரஸியா கதூன் என்பவரும் படித்துவந்தார். இவர் தன்னுடன் படித்தவரை காதலித்துவந்தார். இருவரும் சில வருடமாக காதலித்து வந்தனர். இருவரும் சேர்ந்து தனியாக வீடு எடுத்து வசிக்கலாம் என்று கூறினார் ரஸியா. இதற்கு காதலர் சம்மதிக்கவில்லை. இதையடுத்து கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ரஸியாவின் போன் கால்களை தவிர்த்து வந்தாராம் காதலர். இந்நிலையில் தற்செயலாக ரஸியா தங்கி இருந்த அறைக்குச் சென்றார் காதலர். 

நீண்ட நேரமாகத் தட்டியும் கதவு திறக்கப்படாததால் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் கதவை உடைத்துப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். ஃபேனில் தூக்குப் போட்டு தற்கொலை செய்திருந்தார் ரஸியா. இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.
காதலன் பேசாததால் காதலி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com