\
உத்தரகாண்ட்டில் சக்திவாய்ந்த நில அதிர்வு

உத்தரகாண்ட்டில் சக்திவாய்ந்த நில அதிர்வு

உத்தரகாண்ட்டில் சக்திவாய்ந்த நில அதிர்வு
Published on

உத்தரகாண்ட் மாநிலத்தில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டது. உத்தரகாண்ட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 5.5 ஆக பதிவாகியுள்ளது. 

தலைநகர் டேராடூனில் இருந்து 121 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வு உத்தரகாண்ட் மற்றும் அதனை சுற்றியுள்ள மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டது.

டெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டதை அடுத்து மக்கள் மத்தியில் லேசான பீதி ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com