
பஞ்சாப் மாநிலம் மோகாவில் உள்ள தரம்கோட்டில் தெரு நாய் ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த அஜய் குமார் என்பவர், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்துள்ளார்.
குடிபோதையில் இருந்த நபரொருவர் அந்த நாயைப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளது சிசிடிவி மூலம் தெரியவந்துள்ளது. வன்கொடுமையால் அந்த நாய் இறந்திருக்கலாம் என்கிற நோக்கில், அஜய் குமார் இதுதொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அப்புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தினர். வீடியோ பதிவின் மூலம் அப்பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்பவர்தான் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது.
சம்பவத்தின்போது அவர் குடிபோதையில் இருந்ததும் வீடியோவில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, ராம்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீஸ் விசாரணையின் முடிவில், சம்பவத்தின்போது ராம்குமார் போதையில் இருந்தது, குற்றம் புரிந்தது ஆகியவற்றை அவரே ஒப்புக்கொண்டிருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் ஒடிசாவில் குடிகாரர்கள் இருவர், சுடுகாட்டில் எரிந்துகொண்டிருந்த சிறுமியின் சடலத்தை சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.