உச்சநீதிமன்ற தீர்ப்பில் மாற்றம்: "தெருநாய்கள் மீண்டும் வெளியே விடலாம்" - ராகுல் வரவேற்பு
தெருநாய்களைப் பிடித்து காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்ற தீர்ப்பை தளர்த்தியிருக்கிறது உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வரவேற்று தனது எக்ஸ் தளத்தில் பதிவு
நாடுமுழுவதும் நாய்க்கடிகளும், ரேபிஸ் மரணங்களும் அதிகரித்து வரும் நிலையில், ஆகஸ்ட் 11-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வெளியிட்டது. அதில், டெல்லி, டெல்லி மாநகராட்சி மற்றும் என்எம்டிசி போன்ற பகுதிகளில் இருந்து தெருநாய்களை விரைந்து பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும். மேலும், டெல்லியின் அனைத்துப் பகுதிகளிலும் நாய் காப்பகங்களை கட்ட வேண்டும். இந்தக் காப்பகங்களில் நாய்களை கையாளக்கூடிய கருத்தடை செய்யத்தெரிந்த நிபுணர்களை காப்பகங்களை கொண்டிருக்க வேண்டும் என்றும் எக்காரணத்தை நாய்களை மீண்டும் வெளியே விடக்கூடாது. டெல்லியை தெரு நாய்கள் இல்லாத டெல்லியாக மாற்ற வேண்டும் என்றும் அந்த தீர்ப்பு கூறியது.
இந்த தீர்ப்பு பலதரப்புகளில் இருந்து வரவேற்பையும், எதிர்ப்பையும் பெற்றது. விலங்குகள் நல ஆர்வர்களால் இத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா அடங்கிய குழு இந்த தீர்ப்பை தளர்த்தியிருக்கிறது. அதன்படி, நாய்களை பிடித்து கருத்தடை செய்தப் பின் மீண்டும் வெளியே விடலாம் எனக் கூறியிருக்கிறது. ஆனால் ரேபிஸ் பாதித்த நாய்களையும், ஆபத்தான வகை நாய்களையும் மட்டும் வெளியே விட முடியாது என்றும் கூறியிருக்கிறது. மேலும் தெருநாய்களுக்கு பொதுமக்கள் யாரும் உணவளிக்க முடியாது கூடாது என்றும் நாய்களுக்கு உணவளிக்கும் இடங்களை அரசே ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறது.
இந்நிலையில் இந்தத் தீர்ப்பை வரவேற்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவரது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இப்பதிவில் அவர் கூறியதாவது;
“உச்சநீதிமன்றத்தின் தெருநாய்கள் சம்பத்தப்பட்ட திருத்தப்பட்ட தீர்ப்பை வரவேற்கிறேன். இந்த தீர்ப்பு விலங்கு நலன் அடிப்படையிலும், பொது பாதுகாப்பு அடிப்படையிலும் சமநிலைப்படுத்துவதாக இருக்கிறது. இந்த தீர்ப்பு இரக்கமுள்ளதாகவும் பகுத்தறிவு அடிப்படையிலும் உள்ளது” என்று கூறினார்.