வெள்ளத்தில் சிக்கிய குரங்குகள் - போராடி மீட்கும் தீயணைப்பு வீரர்கள் !

வெள்ளத்தில் சிக்கிய குரங்குகள் - போராடி மீட்கும் தீயணைப்பு வீரர்கள் !
வெள்ளத்தில் சிக்கிய குரங்குகள் - போராடி மீட்கும் தீயணைப்பு வீரர்கள் !

கர்நாடக மாநிலம் தாவங்கேரில் உள்ள துங்கபத்திரா நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட குரங்குகளை தீயணைப்புப்படையினர் மீட்க முயற்சிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியையொட்டிய கர்நாடகா, கேரளா, தமிழகப் பகுதிகளில் கனமழை மற்றும் வெள்ளம் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக இம்மாநிலங்களில் இருக்கும் காடுகளில் வாழும் உயிரினங்கள் பெரும் உயிர் போராட்டத்தை எதிர்கொள்ள தொடங்கி இருக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக அணைகளில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் பல அணைகளின் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், தமிழகத்தின் ஒகனேக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மழை வெள்ளம் காரணமாக தாவாங்கேரில் மாவட்டத்தின் ராஜன்ஹல்லி கிராமத்தில் குரங்குகள் இரண்டு நாட்களாக மரத்திலேயே தங்கி இருக்கிறது. இந்தக் குரங்குகளை காப்பாற்றும் முயற்சியில் வனத்துறை ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் தாவங்கேரில் உள்ள துங்கபத்திரா நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட குரங்குகளை தீயணைப்புப்படையினர் மீட்க முயற்சிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் நதியை கடக்க முடியாமல் ஏராளமான குரங்குகள் மரங்களில் தஞ்சமடைந்துள்ளன. கடந்த 2 நாட்களாக உணவின்றி தவிக்கும் குரங்குகளை பத்திரமாக மீட்கவேண்டுமென அப்பகுதி மக்கள் மீட்புப்படையினருக்கு தகவல் அளித்ததையடுத்து வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்தனர். குரங்குகள் கிளைக்கு கிளை தாவியதால் அவற்றை மீட்பது சவாலாக இருப்பதாக மீட்புப்படையினர் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com