\
போரை நிறுத்துங்க: ஐநா சபைக்கு கோரிக்கை விடுத்த புதுச்சேரி புதுமணத் தம்பதியர்

போரை நிறுத்துங்க: ஐநா சபைக்கு கோரிக்கை விடுத்த புதுச்சேரி புதுமணத் தம்பதியர்

போரை நிறுத்துங்க: ஐநா சபைக்கு கோரிக்கை விடுத்த புதுச்சேரி புதுமணத் தம்பதியர்
Published on

ரஷ்யா - உக்ரைன் போரை நிரந்தரமாக நிறுத்தக் கோரி புதுச்சேரியில் புதுமண தம்பதிகள் கையில் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி வலியுறுத்தினர்.

ரஷ்யா - உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரின் காரணமாக ஏராளமான ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியில் இன்று அசோக்ராஜா மற்றும் சத்யா ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது இருவரும் மணக்கோலத்தில் ரஷ்யா - உக்ரைன் போரை நிரந்தரமாக நிறுத்த ஐ.நா சபை வலியுறுத்தக் கோரி கையில் பல்வேறு வாசங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி வலியுறுத்தினார்கள்.

இதேபோல் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்து சிறுவர்கள் மற்றும் உறவினர்களும் கையில் போர் வேண்டாம், அமைதி வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி வலியுறுத்தினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com