மின்சார பேருந்தை திருடிச் சென்ற போது பாதி வழியிலேயே எதிர்பாராத ட்விஸ்ட்.. திருடன் பரிதாப ஓட்டம்!

திருப்பதியில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான மின்சார பேருந்து திருடப்பட்ட நிலையில் திரும்ப மீட்கப்பட்டது.

திருப்பதியில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான மின்சார பேருந்து திருடப்பட்ட நிலையில், அதனை காவல்துறையினர் மீட்டுள்ளனர். உச்சக்கட்ட பாதுகாப்பு உள்ள திருமலையில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அதிகாலையில் திருடி சென்றார். பேருந்தில் இருந்த ஜி.பி.எஸ் மூலம் கண்காணித்ததில், நாயுடுபேட்டை அருகே சாலையோரத்தில் பேருந்து இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து பேருந்தை மீட்ட காவல்துறையினர், தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர். மின்சார பேருந்தில் சார்ஜ் காலியானதால் பேருந்தை அந்த நபர் விட்டு சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com