விமான டாய்லெட்டில் குறைமாத கரு: 19 வயது வீராங்கனையிடம் விசாரணை!

விமான டாய்லெட்டில் குறைமாத கரு: 19 வயது வீராங்கனையிடம் விசாரணை!
விமான டாய்லெட்டில் குறைமாத கரு: 19 வயது வீராங்கனையிடம் விசாரணை!

டெல்லிக்கு வந்த விமானத்தின் கழிவறையில் குறை மாதத்தில் பிறந்த கரு கிடந்ததால், ஊழியர்கள் அதிச்சி அடைந்தனர்.

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து கவுகாத்தி வழியாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு ஏர் ஏசியா விமானம் நேற்று வந்தது. விமானம் தரையிறங்கும் முன், விமான நிலைய கழிவறைக்கு விமான ஊழியர் ஒருவர் சென்றார். அப்போது அங்கு குறை மாத கரு ஒன்று ரத்தக்கறையுடன் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக விமானிக்கும் அங்குள்ள விமான பணியாளர்களிடம் தெரிவித்தார். ஏர் ஏசியா விமான மேலாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

விமானம் தரையிறங்கியதும் விமானப் பணியாளர்கள் யாரையும் கீழே இறங்கவிடவில்லை. உடனே போலீசார் விமானப் பயணிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். சுமார் முக்கால் மணி நேரத்துக்குப் பின் ஆண் பயணிகள் விடுவிக்கப்பட்டனர். 

ஒன்றரை மணி நேர விசாரணைக்குப் பிறகு 19 வயது விளையாட்டு வீராங்கனைதான் இந்தக் கருவை பிரசவித்தது என்பது தெரிய வந்தது. ஆனால், அவர் யார் என்கிற அடையாளத்தை போலீசார் தெரிவிக்கவில்லை. 

இது தொடர்பாக வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை என்றும் அந்த வீராங்கனையிடம் மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் விமான நிலையை போலீஸ் அதிகாரி சஞ்சாய் பாட்டியா தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com