“காலையில் மக்கள் குறைகளை கேட்பது; மதியம் கூலி வேலை”-தினக்கூலியாய் தொடரும் பஞ்சாயத்து தலைவி

“காலையில் மக்கள் குறைகளை கேட்பது; மதியம் கூலி வேலை”-தினக்கூலியாய் தொடரும் பஞ்சாயத்து தலைவி
“காலையில் மக்கள் குறைகளை கேட்பது; மதியம் கூலி வேலை”-தினக்கூலியாய் தொடரும் பஞ்சாயத்து தலைவி

பஞ்சாயத்துத் தலைவியாக இருக்கும் பீமவ்வா, முன்பு தான் பார்த்துவந்த தினக்கூலி வேலையை விட்டுவிடாமல் இப்போதும் தொடர்ந்து வருகிறார்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பீமவ்வா என்ற பெண்ணும் அவரது கணவரும் கர்நாடக மாநிலம் உடுப்பியில் குடிபெயர்ந்தனர். அங்கு கூலி வேலை பார்த்துவந்த பீமவ்வா, கடந்த 2020ஆம் ஆண்டு உடுப்பியில் உள்ள தல்லூர் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது வரை பீமவ்வா, ஏற்கனவே தான் பார்த்துவந்த கூலி வேலையை விட்டுவிடாமல் தொடர்ந்து வருகிறார்.

பல நாட்களில் மதியம் வரை மக்கள் பிரச்சினைகளை கேட்டறிந்துவிட்டு, அதன் பின்னர் கூலி வேலைக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். தனக்கு ஒருநாள் கூலியாக 500 ரூபாய் கிடைப்பதாக பீமவ்வா கூறுகிறார்.

இதையும் படிக்க: கேரளா: நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது ஆர்எஸ்எஸ் பிரமுகரின் 2 கைவிரல்கள் துண்டானது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com