\
குடிபோதையில் உறங்கிய 'ஸ்டேஷன் மாஸ்டர்'.. சிக்னல் கிடைக்காததால் காத்திருந்த விரைவு ரயில்கள்

குடிபோதையில் உறங்கிய 'ஸ்டேஷன் மாஸ்டர்'.. சிக்னல் கிடைக்காததால் காத்திருந்த விரைவு ரயில்கள்

குடிபோதையில் உறங்கிய 'ஸ்டேஷன் மாஸ்டர்'.. சிக்னல் கிடைக்காததால் காத்திருந்த விரைவு ரயில்கள்
Published on: 

உத்தரப் பிரதேசம் மாநிலம் கஞ்சவுசி ரயில் நிலையத்தின் உதவி ஸ்டேஷன் மாஸ்டர் குடிபோதையில் உறங்கியதால் டெல்லி - ஹவுரா இடையிலான ரயில் சேவை தாமதமானது.

கஞ்சவுசி ரயில் நிலையத்தில் துணை ஸ்டேஷன் மாஸ்டராக பணியாற்றி வருபவர் குடி போதையில் உறங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த ரயில் நிலையில் டெல்லி - ஹவுரா வழித்தடத்தில் இருக்கிறது. பணி செய்ய வேண்டிய நபர் போதையில் தூங்கிவிட்டதால் அவ்வழித்தடத்தில் ரயில்களை கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் தாமதமானது. இதனால் பெரும் குழப்பம் நிலவியது. பின்பு ரயில் நிலைய அதிகாரிகள் குழப்பத்தை சரி செய்தனர்.

ரயில் நிலையத்தில் குடி போதையில் உறங்கி குழப்பத்துக்கு காரணமான துணை ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாகவும் துறை ரீதியான விசாரணை மேற்கொண்டிருப்பதாகவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com